காதலுக்காக சமந்தா அடித்த பல்டி

1420690855-2777பெங்களூர் டேய்ஸ் மலையாளப் படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் ரீமேக்காகி வருகிறது. இயக்குபவர், நடிப்பவர் எல்லாமே ஒன்றுதான்.

இந்த ரீமேக்கில் பிரதான வேடத்தில் நடிக்க அன்றைய காதலர்களான சித்தார்த், சமந்தாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருந்தது. அவர்களும் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சித்தார்த், சமந்தா இடையேயான காதல் முறிந்தது. நான் பெங்களூர் டேய்ஸ் ரீமேக்கில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்தார் சமந்தா. சித்தார்த்தும் அப்படத்திலிருந்து விலகிக் கொண்டார். சமந்தாவுக்கு பதில் ஸ்ரீ திவ்யா ஒப்பந்தமானார்.

இந்நிலையில் இந்த ரீமேக்கில் சின்ன வேடம் ஒன்றில் நடிக்க சமந்தா சம்மதித்துள்ளார். மலையாளத்தில் பகத் பாசில் காதலியாக நித்யாமேனன் நடித்த வேடம் இது. சிறிது நேரமே படத்தில் வரக்கூடியது.

பொம்மரிலு பாஸ்கர் இந்த ரீமேக்கை இயக்கி வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online