பிரபு சாலமனுக்காக சர்வரான தனுஷ்

dhanush3தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘மாரி’ படத்தை தொடர்ந்து வேல்ராஜ் இயக்கும் ‘விஜபி-2’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமாக்கப்பட உள்ளதாம். இதற்காக சென்னையில் உள்ள பின்னி மில்லில் ரெயில் நிலையம் போன்ற அரங்கை அமைத்துள்ளனர்.

டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரும் ரெயிலில் நாயகனுக்கும், நாயகிக்கும் நடக்கும் காதலும், மோதலும்தான் இப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இதில் தனுஷ், ரெயில் கேண்டீன் சர்வராக நடிக்கிறாராம்.

இப்படத்திற்காக ‘எக்ஸ் மேன்’, ‘ஜேம்ஸ் பாண்ட் சீரியசின் ஸ்கைபால்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ரோகர் யுயன் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார்.

டி.இமான் இசையமைக்க, வி.மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries