பாலா அழைத்ததும் கதை கேட்காமல் சண்டி வீரனில் நடித்தேன்: அதர்வா பேச்சு

Balas-ChandiVeeranசற்குணம் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சண்டி வீரன்’. இதில் அதர்வா நாயகனாகவும், கயல் ஆனந்தி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் பாலா இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் அதர்வா, கயல் ஆனந்தி, இயக்குனர் சற்குணம், ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில்,

இயக்குனர் பேசும்போது, ‘நான் இயக்கிய ‘வாகைச்சூடவா’, ‘களவாணி’ ஆகிய படங்களின் வரிசையில் ‘சண்டி வீரன்’ படம் இருக்கும். அனைவரும் ரசிக்கும் வகையில் பொழுது போக்கு படமாக உருவாக்கியிருக்கிறேன். இப்படத்தில் கேரள நடிகர் லால் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சண்டகோழி படத்திற்குப் பிறகு லால் நடிகருக்கு பேர் சொல்லும் படமாக இப்படம் அமையும். முதலில் நான் பாலாவிடம் கதையை சொன்னேன். அவர் கதையை கேட்டு நல்ல இருக்கு என்று சொன்னார்.

பின்னர் கதாநாயகனாக அதர்வாவை நடிக்க வைக்கலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னேன். நல்லது என்று கூறி இப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்றார். கயல் படத்தை பார்த்து ஆனந்தியை தேர்வு செய்தேன்’ என்றார்.

அதர்வா பேசும்போது, ‘எனக்கு இயக்குனர் பாலா போன் செய்து உடனே பார்க்க வேண்டும் என்று அழைத்தார். நான் உடனே அவரை சந்திக்க வந்தேன். கதை ஒன்று கேட்டேன். அதில் நீ நடிக்க வேண்டும் என்று கூறினார். நானும் கதை கேட்காமல் சரி என்று சொன்னேன்.

அதன் பிறகுதான் தெரியும் சற்குணம்தான் இப்படத்தை இயக்க போகிறார் என்று. ‘களவாணி’ படத்தை பார்த்து சற்குணம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

அது தற்போது நிறைவேறியுள்ளது. இப்படத்தில் நான் கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறேன். கிராமத்து பின்னணியில் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது’ என்றார்.

கயல் ஆனந்தி பேசும்போது, ‘நான் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். சற்குணம் இயக்கத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’ என்றார்.

‘சண்டி வீரன்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 7ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries