விஜய்தான் சூப்பர் ஸ்டார் – அரிவாளை போட்ட ஒளிப்பதிவாளர்

cameraman-natraj-reject-2-bollywood-movie-because-of-vijay-projectயார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வாரப்பத்திரிகை நடத்திய போட்டி எந்தளவு சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்நிலையில் மீண்டும் சூப்பர் ஸ்டார் சர்ச்சையை தொடங்கி வைத்தார், நட்டு என்கிற நட்ராஜ்.

பிரபல ஒளிப்பதிவாளரான நட்டு, அவ்வப்போது திரைப்படங்களிலும் நடிப்பார். சென்ற வருடம் அவரது நடிப்பில் வெளியான சதுரங்க வேட்டை பெரும் வெற்றி பெற்றது. அவர்தான் புலி படத்தின் ஒளிப்பதிவாளர்.

புலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது விஜய்யை, இளைய தளபதி சூப்பர் ஸ்டார் விஜய் என்று அழைத்தார் நட்டு. இது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு, நான் தெரியாமல் தடுமாற்றத்தில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என கூறவில்லை, தெரிந்தேதான் கூறினேன் என்றார்.

இந்த பதிலை இணையத்தில் யார் யார் எப்படி திரித்தும் திட்டியும் எழுதப் போகிறார்களோ.

பத்த வச்சிட்டீங்களே பாஸ்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online