அமெரிக்க காதலர் – ரகசியத்தை உடைத்த அஞ்சலி

1438319979-173அஞ்சலி தன்னைத்தானே கடத்தி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட போது, இன்னொரு வதந்தியும் கிளம்பியது. அஞ்சலி அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரை காதலிக்கிறார், அடிக்கடி அமெரிக்கா சென்று காதலரை சந்தித்து வருகிறார்.

நாளடைவில் இந்த வதந்தி வளர்ந்தது. அஞ்சலிக்கும் அமெரிக்க காதலருக்கும் திருமணம் முடிந்து, குழந்தைகூட இருக்கிறது என்றார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் அஞ்சலி.

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எனக்கு அமெரிக்காவில் காதலர் இருப்பதாகவும், அதனால் அடிக்கடி அமெரிக்கா சென்று வருவதாகவும் எழுதுகிறார்கள்.

இதில் உண்மை கிடையாது. நான் நடித்த தெலுங்குப் படம், சித்ரகதாவின் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. அதில் கலந்து கொள்ளவே அடிக்கடி அமெரிக்கா சென்றேன் என்றார்.

அஞ்சலியின் அமெரிக்க காதலர் எப்படி உருவானார் என்ற ரகசியம் கசிந்துவிட்டது. இனியாவது வதந்தியாளர்கள் மௌனமாவார்களா?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries