பிகே திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி ஒரு விளம்பர படத்தை இயக்குகிறார். இதில், ‘குயின்’ படத்தின் மூலம் இந்திய ரசிகர்களின் நெஞ்சை அள்ளிய நடிகை கங்கனா ரனாவத்துடன் தோன்ற இருக்கிறார் அமிதாப் பச்சன்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இத்தகைய திறமை வாய்ந்த, அதிசய நடிகையுடன் இப்போதுதான் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என குறிப்பிட்டுள்ளார்.
பிகே படத்தின் மூலம் இந்தியாவையே கலக்கிய ராஜ்குமார் ஹிரானி என்னும் அதிசயம், தான் தாடியோடு இருக்கும்போதுகூட சிறந்த விதத்தில் படம் பிடித்திருக்கிறார் என புகைப்படங்களுடன் அமிதாப் குறிப்பிட்டிருந்தார்.