நடன இயக்குனர் ஸ்ரீதர் கதாநாயகனாக நடிக்கும் போக்கிரி மன்னன்

Pokkiri-Mannan-Movie-Stills-11நடன இயக்குனர் ஸ்ரீதர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘போக்கிரி மன்னன்’. இதில் ஸ்ரீதருக்கு ஜோடியாக ஸ்பூர்தி நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் மயில்சாமி, சிங்கம்புலி, ரமேஷ் ரெட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ராகவ் மாதேஷ் இயக்கியிருக்கிறார். இந்திரவர்மன் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் குறித்து ஸ்ரீதர் கூறும்போது, ‘நான் இதுவரை 200 படங்களுக்கு மேல் நடனம் அமைத்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழி படங்களிலும் பணியாற்றியிருக்கிறேன். போலி மது பற்றிய படம் இது. நான் இதற்குமுன் பாலசந்தரின் ‘பொய்’ படத்தில் நடித்திருக்கிறேன்.

நடிப்பது மிகவும் கடினம். ஆனால் இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க சம்மதித்தேன். இப்படத்திற்கு நானே நடனம் அமைத்திருக்கிறேன்.

எல்லாருக்கும் பிடிக்கும் விதமாக இப்படத்தின் நடனமும் படமும் இருக்கும். திருச்சி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். படத்திற்கு முதலில் நிறைய தலைப்பு தேடினோம். கடைசியாக ‘போக்கிரி மன்னன்’ தேர்வு செய்தோம். படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இம்மாதம் திரைக்கு வரவிருக்கிறது’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online