நடிகர் வினுசக்கரவர்த்தியை மருத்துவமனையில் சந்தித்த விஜயகாந்த்

hqdefaultபல படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் வினுசக்கரவர்த்தி. இவர் வில்லனாக நடித்த பல படங்களில் நடிப்பால் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் இன்னும் பல படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.

இவர் கடந்த சில நாட்களாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரை நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது, வினுசக்கரவர்த்தியிடம் உடல் நலம் விசாரித்ததுடன், விரைவில் பூரண குணமடைந்து வழக்கம்போல் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வீர்கள் என விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries