பாயும் புலி ஆடியோ வெளியீட்டில் அப்துல் கலாமுக்கு மரியாதை

pa2விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் புலி’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில், நடிகர்கள் விஷால், சூரி, ஜே.கே.ரித்தீஷ், மனோபாலா, நடிகை காஜல் அகர்வால், தயாரிப்பாளர் பாரிவேந்தர், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இயக்குனர் சுசீந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புகைப்படம் திறந்து வைக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை தயாரிப்பாளர் பாரிவேந்தர் திறந்து வைத்தார்.

பின்னர், விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் பூங்கொத்துக்கு பதிலாக அப்துல் கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ புத்தகம் வழங்கப்பட்டது. மேலும், ‘பாயும் புலி’ படத்தின் செலவுக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையில் மிச்சமான பணத்தில் 2 பெண்களுக்கு கல்வி உதவித் தொகையை தயாரிப்பாளர் பாரிவேந்தரும், நடிகர் விஷாலும் இணைந்து கொடுத்தனர்.

மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமின் நீண்ட கால கனவான அனைவருக்கும் கல்வி என்பதை போற்றும் வகையில், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘பாயும் புலி’ படக்குழுவினர் இந்த உதவிகளை செய்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries