பாகுபலி இரண்டாம் பாகத்தின் தலைப்பு வெளியானது?

bahubali_640x480_71432292760எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி, பிரம்மாண்டமாக வெளிவந்த ‘பாகுபலி’ படம் தென்னிந்தியா மட்டுமல்லாது, வட இந்தியாவிலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதுமட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் இதுவரை எந்தவொரு இந்திய படங்களுக்கும் இல்லாத வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.

இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிட இயக்குனர் ராஜமௌலி முழுவீச்சில் களமிறங்கியுள்ளார். ஏற்கெனவே, பாகுபலி இரண்டாம் பாகத்தில் 40 சதவீத படப்பிடிப்புகளை முடித்துவிட்ட ராஜமௌலி, மீதி 60 சதவீத படப்பிடிப்புகளை அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறார்.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியுள்ளதால், இரண்டாம் பாகத்தில் பிரம்மாண்டத்தை மேலும் அதிகப்படுத்த ராஜமௌலி திட்டமிட்டுள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல், பாலிவுட் நடிகர், நடிகைகளையும் இதில் நடிக்க வைக்க முயற்சிகள் எடுத்து வருகிறாராம். இப்படத்திற்கான புது லொக்கேஷன்களை தேர்வு செய்ய தற்போது ராஜமௌலி வட இந்தியாவுக்கு விசிட் செய்துள்ளாராம்.

இந்நிலையில், இரண்டாம் பாகத்திற்கு புதிய தலைப்பு வைக்க முடிவு செய்து, அதன்படி ‘மஹாபலி’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகத்தை வெளியிடவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online