இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு விரைவில் திருமணம்: சென்னை மாணவியை மணக்கிறார்

alphonse-putharenநிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் தமிழில் வெளிவந்த ‘நேரம்’ படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். வித்தியாசமான திரைக்கதையம்சத்துடன் வெளிவந்த இப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இப்படத்தை தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் மலையாளத்தில் நிவின் பாலியை வைத்து ‘பிரேமம்’ என்ற படத்தையும் இயக்கினார். இப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சினிமாவில் தொடர் வெற்றியால் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் அல்போன்ஸ் புத்திரனுடைய சொந்த வாழ்க்கையிலும் தற்போது மகிழ்ச்சியான செய்தி கைகூடி வந்திருக்கிறது.

அதாவது, அல்போன்ஸ் புத்திரனுக்கும் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அலீனா மேரியும் திருமணம் செய்யவிருக்கிறார்கள். அலீனா மேரி, கொச்சியை சேர்ந்த மலையாள தயாரிப்பாளர் ஆல்பின் ஆண்டனியின் மகள்.

இவர்களுடைய திருமணம் காதல் திருமணம் அல்ல. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் வருகிற 17-ந் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது. திருமணம் 22-ந் தேதி நடைபெறுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online