தமிழில் முரட்டு தேசமாக வெளியாகும் டாம் க்ரூஸ் படம்

1438780096-9822டாம் க்ரூஸின் மிஷன் இம்பாஸிபிள் சீரிஸின் ஐந்தாவது பாகம், மிஷன் இம்பாஸிபிள் – ரோக் நேஷன் சென்ற வாரம் யுஎஸ்ஸில் வெளியானது.

முதல் மூன்று தினங்களில் – வியாழன் ப்ரிவியூ காட்சிகளையும் சேர்த்து – 56 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது.

ப்யூரிஸ் 7, ஜுராஸிக் வேர்ல்ட் போன்ற படங்கள் முதல் மூன்று தினங்களில் 200 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வசூலிக்கையில், டாம் க்ரூஸின் படம் 56 மில்லியன் டாலர்களில் சிக்கிக் கொண்டுள்ளது.

என்றாலும், இது நல்ல வசூலில் என்கிறார்கள் ஹாலிவுட் விமர்சகர்கள். 150 மில்லியன் டாலர்களில் தயாரானப் படத்துக்கு இது சிறந்த ஓபனிங் என்பது அவர்களின் கணிப்பு.

மிஷன் இம்பாஸிபிள் – ரோக் நேஷன் வரும் 7-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. தமிழில் மிஷன் இம்பாஸிபிள் – முரட்டு தேசம் என்ற பெயரில் வெளியிடுகின்றனர்.

படத்தின் சண்டைக் காட்சிகளை டர்ம் க்ரூஸ் அதிகம் டூப் போடாமல் செய்துள்ளார். சாகசக் காட்சிகள் நன்றாக உள்ளதாக விமர்சகர்களும், ரசிகர்களும் தெரிவித்துள்ளதால் முரட்டு தேசம் தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online