தணிக்கை குழுவினர் பாராட்டிய சண்டிவீரன்

10-1425968237-sandiveeran--600‘பரதேசி’ படத்திற்கு பிறகு அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சண்டிவீரன்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தை பாலாவின் பி.ஸ்டுடீயோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படம் குறித்து ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எஸ்.சரவணன் கூறும்போது, இப்படம் வருகிற ஆக 7-ந் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 250 முதல் 350 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

எல்லா மொழிகளிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சண்டிவீரன் கிராமத்து பின்னணியில் அமைந்துள்ள படம்.

இந்த படத்தில் காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கக்கூடிய விறுவிறுப்பு படமாக அமைந்துள்ளது.

இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் எந்தவொரு காட்சிக்கும் கட் கொடுக்காமல் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். குடும்பத்துடன் கண்டுகளிக்கக்கூடிய படமாக எடுத்ததற்கு தணிக்கை குழுவினர் பாராட்டு தெரிவித்தனர் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ‘சண்டிவீரன்’ படத்தைத் தொடர்ந்து சிபிராஜ், சத்யராஜ், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜாக்சன் துரை’ படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் திகில் நிறைந்த பேய் படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில், இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறோம். ‘சண்டிவீரன்’ வெளியாகும் திரையரங்குகளில் ‘ஜாக்சன் துரை’ படத்தின் டிரைலரை வெளியிடுகிறோம் என்றும் தெரிவித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online