ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் யானும் தீயவன்

1438700727-8672அவ்வப்போது செந்தமிழில் பெயர் வைத்து அசரடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் பிரஷாந்தின் முதல் படத்தின் பெயர், யானும் தீயவன். நானும் தீயவன் என்று பொருள்.

முன்பெல்லாம் நல்லவன்தான் ஹீரோ. இப்போது கெட்டவனாக ரவுடியிசம் செய்பவனே ஹீரோ. மாரி போன்ற படங்களில் நாயகன் தனது கெட்டவன் இமேஜை சுபம் போடும் போதுகூட மாற்றுவதில்லை. யானும் தீயவன் எப்படி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அஸ்வின் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் விடிவி கணேஷ், ராஜு சுந்தரம், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். வர்ஷா என்பவர் நாயகி.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தை பெப்பி சினிமாஸ் என புதிய படநிறுவனம் தயாரிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries