வடிவேலு வசனத்தை படத்தலைப்பாக்கிய ஜி.வி.பிரகாஷ்

darling-director-sam-anton-to-direct-gv-prakash-again-for-studio-green-production-photos-pictures-stillsஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். திகில் மற்றும் காமெடியுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் புதிய படத்தை இயக்கவுள்ளார். இதில் நாயகனாக மீண்டும் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கு தலைப்பாக வடிவேலு நடித்த ‘வின்னர்’ படத்தில் இடம்பெற்ற பிரபலமான வசனமான ‘கைப்புள்ள’ என்ற வார்த்தையை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‘கைப்புள்ள’ என்ற தலைப்பு கச்சிதமாக இருக்கும் என்ற நோக்கத்தில் தலைப்பை தேர்வு செய்திருக்கிறார்களாம்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை தவிர ‘புரூஸ் லீ’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

வித்தியாசமான தலைப்புகளை தேர்வு செய்து வரும் ஜி.வி.பிரகாஷின் படங்கள் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online