சூரிக்கு அட்வைஸ் சொன்ன அஜித்

why-soori-refused-to-act-in-ajiths-filmஅஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜித்துடன் நடித்தது குறித்து சூரி கூறும்போது,

‘நான் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஆனால் அஜித்துடன் நடித்ததில்லை. அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. அது தற்போது இப்படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது.

அஜித் என்னிடம், நீ எப்போதும் இப்படியே இருக்க வேண்டும். யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே. உன் வாழ்க்கை தரத்தை மட்டும் மாற்றிக் கொள். ஆனால் உன்னுடைய சுபாவத்தை மாற்றாதே என்று அறிவுரை கூறினார்’ என்றார்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். தங்கையாக லட்சுமி மேனனும் வில்லனாக கபீர் சிங்கும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 65 சதவிகிதம் முடிந்துள்ளது. இப்படத்திற்கு ‘வெட்டி விலாஸ்’ என்ற தலைப்பு வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries