சுதந்திர தினத்திற்கு சுதந்திரமாக வரும் சிம்பு

simbu-stylish-pics08சிம்பு நடிப்பில் நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்த படம் ‘வாலு’. இப்படம் தயாரிக்கும் போது பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. ஒருவழியாக படத்தை தயாரித்து முடிந்த பிறகு டி.ராஜேந்தர் இப்படத்தை வாங்கி வெளியிட முடிவு செய்தார். ஜூலை 17ம் தேதி இப்படம் வெளியாக தயாராக இருந்தது. அப்போது மேஜிக் ரேஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கால் படம் ரிலீசாகாமல் தள்ளி போனது.

படம் சிக்கலில் இருப்பதால் விஜய் தலையிட்டு இப்படத்தின் பிரச்சனைகளை தீர்க்க உதவி செய்தார். இந்நிலையில் உயர் நீதிமன்றம் ‘வாலு’ படத்திற்கான அனைத்து தடைகளையும் நீக்கி இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

இதனால் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அனேகமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘வாலு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை விஜய் சந்தர் இயக்கியிருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online