அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசைப்படும் ராஜமௌலி

1438855208-6981ராஜமௌலியின் பாகுபலி பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இதன் இரண்டாம் பாகத்தின் 40 சதவீத படப்பிடிப்பு முதல்பாகத்தின் போதே முடிந்துவிட்டன.

மீதமுள்ள காட்சிகளை செப்டம்பரில் தொடங்கி இந்த வருடத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். படம் அடுத்த வருடம் வெளியாகும்.

இப்போது அனைவர் முன்னும் இருக்கும் கேள்வி, ராஜமௌலி அடுத்து யாரை இயக்குகிறார்?

இதற்கு பதிலளிக்கும்விதமாக பேசிய ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், கமர்ஷியல் குறைவாக சமூக கருத்துள்ள படத்தை ராஜமௌலி இயக்கவிருப்பதாகவும், தமிழில் அஜீத்தை வைத்தும், தெலுங்கில் அல்லு அர்ஜுனை வைத்தும் படத்தை இயக்க விரும்புவதாகவும் கூறினார். அஜீத் நடிக்காதபட்சத்தில் வேறு நடிகரை அணுகவிருப்பதாகவும் கூறினார்.

பாகுபலி படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்த ராஜமௌலி இரண்டுமுறை அஜீத்தை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online