தனுஷா, சூர்யாவா? பிரேமிக்கப் போவது யார்?

1438857537-0642மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க தனுஷ், சூர்யா இருவரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், வாய்ப்பு தனுஷுக்கே என்கின்றன செய்திகள்.

அல்போன்ஸ் புத்திரன் இயக்க, அன்வர் ரஷீத் தயாரித்த படம், பிரேமம். சேரனின் ஆட்டோகிராஃப் சாயலில் அமைந்த இந்தப் படத்தில் நிவின் பாலி நடித்திருந்தார். படம் இதுவரையான மலையாள சினிமாவின் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து ஓடியது.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டது. நாக சைதன்யா அனேகமாக இதில் நடிக்கக்கூடும். தமிழ் ரீமேக் உரிமையை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் வாங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரேமம் ரீமேக்கில் நடிக்க தனுஷ், சூர்யா இருவருமே ஆர்வம் காட்டுகிறார்கள். ஸ்டுடியோ கிரீன் உரிமை வாங்கிய படத்தில் நடிக்க சூர்யாவுக்கே முதல் வாய்ப்பு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பிரேமத்தின் கதை நாயகன் பள்ளியில் படிக்கும் போது ஆரம்பிக்கிறது. இந்த வயதில் சூர்யாவை சிக்ஸ்பேக்குடன் பள்ளிக்கு அனுப்பினால் நன்றாகவா இருக்கும்.

இந்த ஒரே காரணத்துக்காக தனுஷுக்கு பிரேமம் ரீமேக் வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online