செப்டம்பர் மாதம் பயமுறுத்த வரும் ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி

mfsSrikanth-and-Raai-Laxmi_0தற்போது ரசிகர்களிடையே பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா 2’, ‘டிமான்ட்டி காலனி’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றது. அந்த வரிசையில் தற்போது ஸ்ரீகாந்த்- ராய்லட்சுமி ஜோடியில் உருவாகி வரும் படம் ‘சவுகார்பேட்டை’.

இப்படத்தை மைனா, சாட்டை, மொசக்குட்டி ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் ‘பேகம் பேட்டா’ என்ற பெயரிலும் இந்தியில் ‘தந்திர சக்தி’ என்ற பெயரில் வெளிவர இருக்கிறது.

ஜான்பீட்டர் இசையமைக்கும் இப்படத்தை வடிவுடையான் இயக்கி வருகிறார். இவர் படத்தை பற்றி கூறும்போது, ‘‘இதுவரை பார்த்த ஸ்ரீகாந்த் – ராய் லட்சுமி இருவரையும் இப்படம் வேறுபடுத்தி காட்டும் படமாக இருக்கும்.

பேய் கதைதான், ஆனால் வேறு மாதிரியான உணர்வை இது தரும்’’ என்றார் வடிவுடையான். செப்டம்பர் மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries