ரஜினி பட தலைப்பில் நடிக்கும் பாபி சிம்ஹா

Bobby-Simha-Rajinikanthஜிகர்தண்டா, சூதுகவ்வும் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பாபி சிம்ஹா. இவர் தற்போது உறுமீன், கோ–2, பாம்பு சட்டை, இறைவி, கவலை வேண்டாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஒரே நிறுவனத்தில் 3 படங்களில் நடிக்கும் இவர், ஒரு படத்துக்கு ரஜினி படமான ‘வீரா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

நகைச்சுவை கலந்த இந்த கதைக்கு எழுத்தாளர் பாக்கியம் சார்கர் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். இந்த படத்தை கே.ராஜாராமன் இயக்குகிறார். இந்த படத்தில் பாபி சிம்ஹா ஜோடியாக புதுமுகம் ஐஸ்வர்யாமேனன் அறிமுகமாகிறார்.

21 வருடங்களுக்கு முன்பு ரஜினி–மீனா–ரோஜா ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘வீரா’ படத்தின் தலைப்பை வைக்க ஒப்புதல் பெற்றிருக்கிறார்கள்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries