ஜிகினா ஆகஸ்ட் 21ம் தேதி ரிலீஸ்

CFgz5kmUkAA5atHஇயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிச்சர்ஸ் வெளியிட்ட ‘வழக்கு எண் 18/9’, ‘கோலி சோடா’, ‘மஞ்சபை’, ‘சதுரங்க வேட்டை’ ஆகிய படங்கள் பெரும் வெற்றி அடைந்தது. இப்படங்களை தொடர்ந்து திருப்பதி பிச்சர்ஸ் அடுத்ததாக வெளியிடும் படம் ‘ஜிகினா’. இப்படம் ஆகஸ்ட் 21ம் தேதி வெளிவர உள்ளது.

இப்படம் குறித்து லிங்குசாமி கூறும்போது, ‘ஜிகினா இன்றைய கால கட்டத்துக்கு மிகவும் முக்கியமான படமாகும்.

பெருகி வரும் சமூக வலைதள குற்றங்களைப் பற்றியும், அதன் வாயிலாக பெருகும் குற்றத்தை பற்றியும், அறிமுகம் இல்லா காதல் ஏற்படுத்தும் விளைவுகளையும், மிகவும் ஜனரஞ்சகமாக இன்றைய இளைஞர்களின் மன நிலையை தெள்ளத் தெளிவாக படம் எடுத்து காட்டி இருக்கிறார் எனது நண்பரும் இயக்குனருமான ரவி நந்தா பெரியசாமி.

எனது நிறுவனத்தின் மூலம் வெளியாகும் படங்களின் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல. நல்ல கதைகளையும் அதை சரி வர இயக்கும் இயக்குனர்களையும் இனம் பிரித்து அறிமுகம் செய்வதில் தான் சூட்சுமம் இருக்கிறது. ‘ஜிகினா’ படத்தில் நாயகனாக நடிப்பவர் விஜய் வசந்த்.

இவர் இந்த பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக சானியா தாரா நடித்திருக்கிறார். சிங்கம் புலி, ரவி மரியா, ‘கும்கி’ அஷ்வின், செந்தில், சுகு வெங்கட், குட்டி ஸ்ரீதேவி மற்றும் ஆன்சன் பால் ஆகியோரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.

புதிய இசையமைப்பாளர் ஜான் பீட்டர்ஸ் சிறப்பாக இசையமைத்து உள்ளார். முன்னாள் பிரபல ஒளிப்பதிவாளர் ரங்காவின் மகனும் ஒளிப்பதிவாளருமான பாலாஜி ரங்கா இந்த படத்துக்கு மிக அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பில் உருவான இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வரும் 21 ஆம் தேதி வெளிவர உள்ளது. இளைய தலைமுறையினருக்கு இது படமாக மட்டும் அல்ல பாடமாகவும்’ அமையும் என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries