வாலு படம் வெளியாக தானாக முன்வந்து உதவியவர் விஜய்: டி.ராஜேந்தர் புகழாரம்

vijay-t-rajendar-puli-audio-launchசிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’ படம் பல்வேறு தடைகளையும் தாண்டி வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் டி.ராஜேந்தர் வெளியிடுகிறார். இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் தெரிவிக்க டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது, சிம்பு படம் பல்வேறு தடைகளை தாண்டி வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படம் வெளியீடு சம்பந்தமாக மேஜிக் ரேஸ் நிறுவனத்துக்கும், நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் எழுந்த பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டு விட்டது.

மேலும், இந்த படத்தின் வெளியீட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளிலும் வெற்றி கிடைத்துவிட்டது.

எனவே, நாளை முதல் படத்தின் ரிசர்வேசன் தொடங்கவிருக்கிறது. இப்படத்தை தமிழகத்தில் 300-க்கு அதிகமான திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளுக்கு மேலும் வெளியிடவுள்ளோம். இப்படம் வெளிவர காரணமான அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று பேசினார்.

பின்னர், ‘வாலு’ படத்திற்கு விஜய் உதவியதாக வெளிவந்த செய்திகள் குறித்து டி.ராஜேந்தரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்து டி.ராஜேந்தர் பேசும்போது,

சிம்பு, அஜித்தின் தீவிர ரசிகர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சினிமாவில் எவ்வளவு நடிகர்கள் இருந்தாலும், சிம்பு படத்துக்கு பிரச்சினை என்று வந்தபிறகு யாரும் உதவ முன்வரவில்லை. விஜய் தானாக முன்வந்து இப்படம் வெளிவருவதற்கு மிகவும் உதவியாக இருந்தார்.

அதேபோல், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விநியோகஸ்தர்களிடம் பேசி, இப்படத்தை வெளியாவதற்கு அவர்தான் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

விஜய் ‘வேலாயுதம்’ படத்தில் எனக்கு டி.டி.ஆர் எல்லாம் தெரியாது. டி.ஆர். மட்டும்தான் தெரியும். நான் அவரோட தீவிர ரசிகர் என்று சொல்வார். உண்மையில் நான்தான் அவருடைய தீவிர ரசிகன்.

அவருக்கு நான் நிறைய நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். விஜய் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஏனென்றால், அவர்தான் உண்மையான தமிழன் என்று கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries