நடிகர் பிரசன்னா-சினேகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

sneha-prasannaநடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து மிகவும் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு சினேகா, சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும், ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 1 வருடங்களாகவே சினேகா, எந்தவித படப்பிடிப்பிலும் சினி விழாக்களிலும் கலந்துகொள்ளவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதால் அவர் எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், பிரசன்னா-சினேகா தம்பதியருக்கு நேற்று இரவு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். பிரசவத்திற்கு பிறகு தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

குழந்தை பிறந்ததால், நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்களது உறவினர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries