பாபி சிம்ஹா படத்தில் அப்துல் கலாமுக்கு மரியாதை

KO-2பாபிசிம்ஹா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கோ 2’. இப்படத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர்களிடம் உதவியாளராக இருந்த லியோ ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இவருடைய இசையில் இந்த படத்தில் ‘உன்னை மாற்றினால்’ எனத் தொடங்கும் பாடலில் ‘இந்த உலகத்தை நீ மாற்ற விரும்பினால் உன்னை நீ முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்ற அப்துல்கலாமின் கூறிய அற்புத கருத்துக்களை உள்ளடக்கி ஒரு பாடலாக அமைந்திருக்கிறார்கள்.

இந்த பாடலை தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் பாடியுள்ளார். இந்த பாடலை வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். படத்தில் அறிமுக பாடலாக இதை அமைக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பொலிட்டிக்கல் திரில்லராக உருவாகி வரும் ‘கோ 2’ படத்தில் பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ், நிக்கி கல்ரானி, பாலசரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries