பாகுபலிக்காக விஜய் படத்தை தவிர்த்த சத்யராஜ்

hqdefaultமிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பாகுபலி’. இப்படத்தை ராஜமௌலி இயக்கியிருந்தார். இதில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இதில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.

இந்நிலையில் ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. பாகுபலியை கொன்றதே நான்தான் என்று கட்டப்பா கூறுவது போல முதல் பாகம் முடிக்கப்பட்டிருப்பதால், எதற்காக பாகுபலியை கட்டப்பா கொன்றார்? என்ற காரணத்தை இரண்டாம் பாகத்தில் படமாக்க இருக்கிறார்கள்.

இதற்காக சத்யராஜிடம் அதிக நாட்கள் கால்ஷீட் வேண்டும் என ராஜமௌலி கேட்டிருக்கிறாராம். எனவே 100 நாட்கள் வரை கால்ஷீட் தந்துள்ள சத்யராஜ், தேவைப்பட்டால் மேலும் சில நாட்கள் நடிக்கவும் சம்மதித்துள்ளாராம். இதற்காக அட்லி இயக்கும் விஜய் படத்தில் சத்யராஜ் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries