10 எண்றதுக்குள்ள டீசர் வெளியீடு – கடா மீசையுடன் கலந்து கொண்ட விக்ரம்

1439478140-6551விக்ரம், சமந்தா நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள படத்தின் டீசர் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

கோலிசோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கியிருக்கும் படம், 10 எண்றதுக்குள்ள. ரோடு மூவி வகையைச் சேர்ந்த இந்தப் படத்தை குறுகிய காலத்தில் முடிக்கும் திட்டத்தோடு எடுத்தனர். தயாரிப்பு முருகதாஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ.

பல பிரச்சனைகளால் படப்பிடிப்பு தாமதமாகி படம் இன்னும் முடியாமல் உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ராஜஸ்தானில் படமாக்க உள்ளனர்.

இன்று நடந்த டீசர் வெளியீட்டு விழாவில் கடா மீசையுடன் விக்ரம் கலந்து கொண்டார். ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் கெட்டப் என இது கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online