திரிஷாவுக்கு டப்பிங் பேச கற்றுக் கொடுத்த கமல்

KAMAL_2416350fகமல் நடிப்பில் வெளிவந்த ‘மன்மதன் அம்பு’ படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ‘தூங்காவனம்’ படத்தில் இருவரும் சேர்ந்து நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதில் கமலும், திரிஷாவும் கலந்துகொண்டு தங்களது காட்சிகளுக்கு டப் பேசி வருகின்றனர்.

ஏற்கெனவே, ‘மன்மதன் அம்பு’ படத்திற்கும் திரிஷா தன் சொந்த குரலிலேயே டப் பேசியிருந்தார். அதேபோல், தற்போது இந்த படத்திற்கும் அவர் தனது சொந்த குரலிலேயே டப் பேசியிருக்கிறார். டப்பிங் பேசுவதற்கு கமல்தான் அவருக்கு பயிற்சி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து திரிஷா கூறும்போது, நாம் விரும்பியதும், நம்முடைய தொழிலும் ஒன்றாக அமைந்தால் அதுதான் மிகப்பெரிய வரம். ஒரு சிறந்த மனிதர் எனக்கு கற்றுக்கொடுத்ததை மிகப்பெரிய வரமாக நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

‘தூங்காவனம்’ படத்தை கமலிடம் நீண்ட காலமாக உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜேஷ் செல்வா இயக்கியுள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online