நல்லவனா கெட்டவனா ஆம்பள, தெரியாமத்தான் தவிக்கிறாடா பொம்பள…

1439558933-5914சவாலே சமாளி படத்தில் இப்படியொரு பாடல் இடம்பெற்றிருக்கிறது. நல்லவனா கெட்டவனா ஆம்பள, தெரியாமத்தான் தவிக்கிறாடா பொம்பள.

இந்தப் பாடலை மகாபலிபுரத்தில் படமாக்கப்பட்ட போது நடிகர், இயக்குனர் எஸ்ஜே.சூர்யாவும் உடனிருந்தார். இதில் விசேஷம் இந்தப் படத்திற்கும் எஸ்ஜே.சூர்யாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிறகு ஏன் அவர் பாடல் படமாக்கப்பட்டபோது மகாபலிபுரம் வந்தார்?

சவாலே சமாளி படத்தில் அசோக் செல்வன் நாயகன். பிந்து மாதவி நாயகி. ஜெகன், ஊர்வசி, நாசர், சுவாதி கஞ்சா கருப்பு நடித்துள்ளனர். சத்ய சிவா இயக்கம்.

மேலே உள்ள பாடலை எஸ்ஜே.சூர்யா கேட்டிருக்கிறார். பாடல் பிடித்துப் போனதால், பாடலை படமாக்கும் போது சொல்லுங்கள், நானும் பார்க்க வேண்டும் என்றிருக்கிறார். அதன்படி பாடலை படமாக்கும் போது சரியாக ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார்.

சரி, பாடல் எப்படி வந்திருக்கிறது? அவசரப்படுவானேன். செப்டம்பர் 4 -ஆம் தேதி பாடலை என்ன படத்தையே திரையரங்கில் பார்க்கலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online