அக்டோபர் 2 வெளியாகும் ஆர்யா, அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி

1400912532-4461ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இந்தப் படம் தயாராகியுள்ளது. தெலுங்கில் சைஸ் ஸீரோ என்று பெயர் வைத்துள்ளனர்.

குண்டாக இருக்கும் பெண் சைஸ் ஸீரோவுக்கு மாற முயற்சிப்பதுதான் படத்தின் கதை. இதற்காக குண்டு பெண்ணாகவும், ஒல்லியாகவும் இருவேறு தோற்றங்களில் அனுஷ்கா நடித்துள்ளார்.

பிவிபி சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், சோனல் சௌகான், ஊர்வசி, பரத் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு. மரகதமணி இசை.

அக்டோபர் 2 1500 திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online