போக்கிரி படம் போல் பாயும் புலி சூப்பர் ஹிட்டாகும்: சுசீந்திரன் நம்பிக்கை

The-surprising-climax-of-Vishal’s-Paayum-Puliசுசீந்திரன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பாயும்புலி’. இதில் விஷால் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. தற்போது இறுதிகட்ட வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படம் குறித்து சுசீந்திரன் கூறும்போது, ‘பாயும் புலி’ உண்மை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விஷால் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். விஷால் கூட்டணியில் உருவான ‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றியை பாதிக்காதளவிற்கு இப்படம் இருக்கும்.

எங்களுடைய அதிகப்படியான உழைப்பை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறோம். ‘போக்கிரி’ படம் போல் ‘பாயும் புலி’ வெற்றியடையும்’ என்றார்.

சமீபத்தில் ‘பாயும் புலி’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries