ஓய்வுக்காகவே இளையராஜா ஆஸ்பத்திரியில் அனுமதி

ilayarajaஇசையமைப்பாளர் இளையராஜா நேற்று முன்தினம் தன் பெயரில் தொடங்கப்பட்ட புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்தி பரவியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளையராஜாவுக்கு, ஆஞ்சியோ பிளாஸ்ட் எனப்படும் இருதய நோய்க்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இணையதளங்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கியது.

இதுகுறித்து இளையராஜாவின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரிக்கும்போது, இளையராஜாவுக்கு அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை. மாதாமாதம் அவர் மருத்துவமனைக்கு சென்று தனது உடல்நிலையை பரிசோதித்துக் கொள்வார். அப்படித்தான் அவர் மருத்துவமனைக்கு சென்று தனது உடல்நிலையை பரிசோதித்தார்.

அப்போது, டாக்டர்கள் அவரை சிலநாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி கூற, வீட்டிற்கு சென்றால் அவர் ஓய்வு எடுக்க முடியாது என்பதால், ஆஸ்பத்திரியிலேயே அவரை ஓய்வு எடுக்க வற்புறுத்தியதன் பேரில் அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு, ஓய்வு எடுத்து வருவதாக கூறுகின்றனர்.

இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும், இளையராஜா எப்போதும் போல் நலமுடன் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries