சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய கார்த்தி

karthi-birthday-special-15‘பருத்தி வீரன்’, ‘பையா’, ‘கொம்பன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் கார்த்தி. இவர் நடிகர் சிவகுமாரின் இளைய மகனாவார். இவருடைய அண்ணன் நடிகர் சூர்யா, சமீபத்தில் சொந்தமாக 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

இந்நிறுவனம் மூலம் ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’ படத்தை தயாரித்து வெளியிட்டார். இப்படம் ரசிகர்களிடையே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. எனவே, இதைத் தொடர்ந்து ‘ஹைக்கூ’, ‘24’ என இவர் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தியும் தனது அண்ணனை பின்பற்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரிப்பது மட்டுமில்லாமல், வெளியிடவும் முடிவு செய்துள்ளாராம்.

இவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக முதன்முதலாக இவர் நடித்து வரும் ‘கஷ்மோரா’ படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை கோகுல் இயக்கி வருகிறார். நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries