மகேஷ் பாபுவுக்கு கமல் பாராட்டு

18(52)மகேஷ்பாபு–சுருதிஹாசன் நடித்த ‘ஸ்ரீமந்த்துடு’ தமிழில் ‘செல்வந்தன்’ என்ற பெயரில் வெளியானது. இந்த படம் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் இந்த படம் ஒரே வாரத்தில் ரூ.60 கோடி வசூலை குவித்துள்ளது.

தெலுங்கு பட உலகில் அதிக வசூல் செய்து சாதனை படைத்த படங்களில் இது 5–வது இடத்தை பிடித்திருக்கிறது.

‘ஸ்ரீமந்த்துடு’ படத்தை கமலஹாசன் சமீபத்தில் பார்த்துவிட்டு மகேஷ்பாபுவை பாராட்டியுள்ளார். ‘நடிப்பு, நடனம் இரண்டுமே என்னை கவர்ந்துவிட்டது’ என்று புகழ்ந்து இருக்கிறார்.

சுருதிஹாசன் நடிப்பையும் கமல் பாராட்டி இருக்கிறார். கமல் தன்னை பாராட்டியதை அறிந்த மகேஷ்பாபு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online