பிரபல தெலுங்கு நடிகர் பாலாகிருஷ்ணா சினிமாவை விட்டு விலக முடிவு

Balakrishna_31294rsதெலுங்கு உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் மறைந்த முன்னாள் நடிகரும், ஆந்திராவின் முதலமைச்சராகவும் இருந்த என்.டி.ராமாராவின் மகனாவார். இவர், நடித்த பல படங்கள் தெலுங்கு திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டியது. சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பாலகிருஷ்ணா தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த 40 வருடங்களாக சினிமாவில் கோலாச்சி வரும் பாலகிருஷ்ணா, தற்போது சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். தனது 100-வது படத்தை முடித்த கையோடு சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் களமிறங்க பாலகிருஷ்ணா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலகிருஷ்ணா தற்போது தனது 99-வது படமாக ‘டிக்டேட்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து, போயாபதி சீனு இயக்கும் தனது 100-வது படத்தில் அடுத்த வருடம் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை முடித்த பிறகு, 2017-ஆம் ஆண்டு முதல் பாலகிருஷ்ணா தீவிர அரசியலில் களமிறங்கப் போவதாக கூறப்படுகிறது. அதன் முதற்கட்டமாக ஹிந்துபூர் தொகுதியின் வளர்ச்சி பணிகளில் தீவிரம் காட்டப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries