ஐஸ்வர்யா ராயின் படத்தை பெருமையுடன் பகிர்ந்துகொண்ட அபிஷேக் பச்சன்

ash-abhi_story_650_080514055142பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், அசினுடன் இணைந்து நடித்து விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘ஆல் ஈஸ் வெல்’. இத்திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் அபிஷேக் பச்சன், சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரது மனைவி, நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ஜஸ்பா’ படத்தில் அவர் அருமையாக நடித்துள்ளதாக கூறினார்.

ஆக்‌ஷன் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் சஞ்சய் குப்தாவின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘ஜஸ்பா’ ஒரு திகில் படம். இயக்குனரும், ஐஸ்வர்யா ராயும் தங்களது வழக்கமான பாணியில் இருந்து மாறி, புதிய கோணத்தில் இப்படத்தை எடுத்திருப்பதாக அபிஷேக் பச்சன் கூறினார்.

மேலும், இதில் வக்கீல் வேடத்தில் நடித்திருக்கும், ஐஸ்வர்யா ராய் இதுவரை அவர் நடித்திருந்த கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்டு புதிய அம்சங்களுடன் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

‘ஜஸ்பா’ படத்தில் தேசிய விருது பெற்ற புகழ்பெற்ற நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ ‘லைப் ஆப் பை’ போன்ற படங்களின் மூலம் புகழடைந்த இர்பான் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online