மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் இளையராஜா

ilayaraajaஇசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 2013–ம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்ததையடுத்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.

அவர் வழக்கம்போல் தனது உடலை பரிசோதித்துக் கொள்ளவே ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும், டாக்டர்கள் சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி வற்புறுத்தியதன் பேரில், ஆஸ்பத்திரியிலேயே தங்கி ஓய்வு எடுத்து வருவதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஓய்வுக்கு பிறகு இன்று இளையராஜா வீடு திரும்பியுள்ளார். இதை, இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகனான இயக்குனர் வெங்கட் பிரபு உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும்போது, இசைஞானியின் ரசிகர்களுக்கும், அவரது நலம் விரும்பிகளுக்கும் ஒரு நல்ல செய்தி. ராஜா அப்பா நன்றாக இருக்கிறார்.

அவர் வழக்கம் போல உடல் பரிசோதனைக்குதான் ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டது. எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், தற்போது வீடு திரும்பி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online