என் திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார்: சிம்பு

simbu_640x480_71423122533நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்பு நடிப்பில் தற்போது ‘வாலு’ படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் சிம்பு, டி.ராஜேந்தர், இயக்குனர் விஜய் சந்தர், இசையமைப்பாளர் தமன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதில் டி.ராஜேந்தர் பேசும்போது, ‘வாலு’ படத்தை பல பிரச்சனைகளை தாண்டி ரிலீஸ் செய்தேன். இப்படம் வரவே வராது என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது’ என்றார்.

சிம்பு பேசும்போது, “இப்படம் பல பிரச்சனைகளை தாண்டி வெளியாகி ரசிகர்களிடம் பேராதரவை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் சினிமாவில் நான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்று புரிந்துக் கொண்டேன்.

என்னதான் நல்ல நடிகராக இருந்தாலும், ஒரு படம் வெளிவருவதும், அது வெற்றி பெறுவதும் கடவுள் கையில்தான் இருக்கிறது. இப்படம் வெளிவருவதற்கு காரணமாக இருந்த டி.ராஜேந்தர், விஜய், தாணு, ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படம் வெளியான அன்று ரஜினி படத்தை பார்த்து என்னை அழைத்து, படம் நன்றாக இருக்கிறது. மூன்று வருடம் கழித்து படம் வந்தாலும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். இதை நீ தக்க வைத்துக்கொள் என்றார்.

மேலும் இனிமேல் வரவிருக்கும் படங்களில் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள் என்றார். ரஜினி இவ்வாறு கூறியது மிகவும் சந்தோஷமளித்தது” என்றார்.

மேலும் அஜித், விஜய் பற்றி கேட்கும் போது, “சினிமா என்பது குடும்பம். அஜித், விஜய் இருக்கும் நான் ரசிகன். நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் போல் செயல்பட்டு வருகிறோம்.

நடிகர் சங்க தேர்தல் பற்றி கேட்டதற்கு, நான் விஜய்காந்த் தலைவராக இருந்ததிலிருந்து உறுப்பினராக இருக்கிறேன்.

தற்போது சரத்குமார் தலைவராக இருக்கிறார். விஷால் அணி அவரை எதிர்த்து போட்டியிடுகிறார்கள். என்னை பொருத்தவரை அணிகள் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும்” என்றார் சிம்பு.

திருமணத்தை பற்றி கேட்டபோது, “என்னுடைய திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார். நான் தற்போது சிவன், சாய்பாபாவை வணங்கி வருகிறேன்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online