அர்ஜுன்-பிரசன்னா கூட்டணியில் இணைந்த பாபி சிம்ஹா

Bobby-Simha1அர்ஜுன் தற்போது அருண் வைத்யநாதன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ‘கப்பல்’ திரைப்படத்தை தயாரித்த ‘பேஷன் பிலிம் பேக்டரி’ பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் அர்ஜுனுடன் இணைந்து பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கூட்டணியில் வைபவ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் இணையவுள்ளனர்.

மேலும் இவர்களுடன் சில முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் இணைய இருக்கிறார்கள். மலையாளம், இந்தியில் மட்டுமே பெரிதாக உருவான ‘மல்டி-ஸ்டார்’ திரைப்படங்களுக்கு இணையாக, தமிழில் பல முன்னணி நடிகர்கள் குழுவை அபாரமான தனது கதையின் மூலம் தன்வசப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் அருண் வைத்யநாதன்.

இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். நவீன் இசையமைப்பையும் சதீஷ் சூர்யா படத்தொகுப்பையும் கவனிக்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online