அமலாபால் தயாரிக்கும் படத்திற்கு தலைப்பு ரெடியானது

2307-AmalaPaul-Ag-Lதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலாபால், கடந்த வருடம் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டார். இதன்பின்னர், இவர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இருப்பினும், சினிமா மீதான மோகம் இவரை விட்டு வைக்கவில்லை.

அதன்விளைவாக, சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். தனது நிறுவனம் மூலம் பிரியதர்ஷன் இயக்கும் புதிய படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.

இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டது. இப்படத்தை அமலாபாலுடன் பிரபுதேவாவின் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் நடிகர், நடிகைகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக இப்படத்திற்கான தலைப்பு தேர்வு நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது இப்படத்தில் ‘சில நேரங்களில்’ என்ற தலைப்பு வைத்துள்ளனர். இதை, நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘சில நேரங்களில்’ எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக உருவாகவுள்ளது. சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் ஆர்ட் பணியை மேற்கொள்கிறார். விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries