ரஜினி படத்தின் பெயர் கபாலி எனக்கே சொந்தம் – தொடங்கியது பஞ்சாயத்து

Mysore-based-Sivakumar-claims-Kabali-is-title-of-his-film-under-progressரஜினி படத்தின் பெயர் கபாலியா? என்று நேற்று நாம் செய்தி வெளியிட்ட சற்று நேரத்தில், ரஜினி படத்தின் பெயர் கபாலி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அடுத்தகணமே பஞ்சாயத்தும் தொடங்கியது.

மைசூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் சிவா பிக்சர்ஸ் என்ற பெயரில் கபாலி என்ற படத்தை பல வருடங்களாக தயாரித்து நடித்து வருகிறார். பணம் இருக்கும்வரை படப்பிடிப்பு நடக்கும். அடுத்து பணம் கிடைக்கும் போது அடுத்தகட்ட படப்பிடிப்பு. இப்படியே இரண்டு மூன்று வருடங்களாக கபாலி போய்க் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ரஜினி படத்துக்கு கபாலி என பெயர் வைத்ததும் சிவகுமார் அதிர்ந்துவிட்டார். கில்டில் பணம் கட்டி கபாலி என்ற பெயரை பதிவு செய்திருக்கிறேன். அந்தப் பெயர் எனக்கே சொந்தம். இப்போது கேட்டால், பெயரை புதுப்பிக்கவில்லை என்று புதுக்கதை சொல்கிறார்கள் என புலம்புகிறார்.

படத்தின் பெயரை பதிவு செய்தாலும், குறிப்பிட்ட இடைவெளிகளில் ஐநூறு ரூபாய் செலுத்தி பெயரை பதிவை புதுப்பிக்க வேண்டும். பல லட்சம் செலவு செய்து படம் எடுக்கிற நான் ஐநூறு கட்டி பெயரை புதுப்பிக்க மாட்டேனா? இதெல்லாம் சதிங்க என்கிறார் சிவகுமார்.

கபாலிக்கு பஞ்சாயத்து நடந்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries