டீசர் பாடல்களை தொடர்ந்து புலி படத்தின் டிரைலரும் புதிய சாதனை

vijays-look-puliவிஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புலி’. இதில் சுருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள். சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தை செப்டம்பர் 17–ந்தேதி ‘ரிலீஸ்’ செய்ய இருக்கிறார். உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘புலி’ படத்தின் ‘டிரைலர்’ நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. டிரைலர் வெளியான 15 நிமிடத்திலேயே 1 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.

இது தென்னிந்திய சினிமாவில் வந்த அனைத்து படத்தின் டீசர், டிரைலர்களின் சாதனையை முறியடித்துள்ளது. இது ஒரு இமாலய சாதனையாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே புலி படத்தின் டீசர் விஜய் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. இது குறைந்த நாட்களிலேயே அதிக பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்தது. தற்போது டிரைலரும் புதிய சாதனையை படைத்துள்ளது.

தற்போது உள்ள நிலவரப்படி 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புலி டிரைலரை பார்த்துள்ளனர். மேலும் இன்று முதல் தியேட்டர்களிலும் ‘புலி’ பட டிரைலர் திரையிடப்படுகிறது. இணைய தளத்தில் ‘புலி’ டிரைலரை பார்த்தவர்கள் பிரமாண்டமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online