அஜித்தின் இரண்டாவது வில்லன் ராகுல் தேவ்

1440068471-8684சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தில் லட்சுமி மேனன் அஜித்தின் தங்கையாகவும், ஸ்ருதி அவரது ஜோடியாகவும் நடித்து வருகிறார்கள். வில்லனாக கபீர் சிங் ஒப்பந்தம் செயப்பட்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்னொரு வில்லனாக ராகுல் தேவ் இந்தப் படத்தில் நடிக்கிறார். ராகுல் தேவ்சூர்யாவின் ஆதவன் படத்தில் வில்லனாக நடித்தவர். தற்போது அஜித்தின் வில்லனாக நடித்து வருகிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜித்துடன் இணைந்து நடிப்பது எனக்கு பெருமையாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று ராகுல் தேவ் கூறியிருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பெயரும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries