நாளை சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி திருமணம்

1440067274-3293நடிகர், இயக்குனர் பாக்யராஜ், நடிகை பூர்ணிமா ஜெயராம் தம்பதியின் மகன் சாந்தனுவுக்கும், தொலைக்காட்சி தொகுப்பாளினி கீர்த்திக்கும் நாளை திருமணம் நடக்கிறது.

சாந்தனுவும், கீர்த்தியும் நெடுநாள்களாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் 4 மாதங்களுக்கு முன் நடந்தது. நாளை இவர்களின் திருமணம் நடக்கயிருக்கிறது.

சாந்தனு– கீர்த்தி திருமணம் நாளை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் நடைபெறுகிறது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

இதில் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online