ஆக.28 திரைக்கு வரும் தனி ஒருவன்

1440054373-9634கடைசியில் தனி ஒருவனுக்கு தேதி குறித்துவிட்டார்கள். ஆக.28 படம் திரைக்கு வருகிறது.

ரீமேக் படங்கள் மட்டும் இயக்கி வந்த ராஜா, முதல்முதலாக சொந்தமாக கதை எழுதி இயக்கிய படம், வேலாயுதம். தொடர் தோல்விகளில் இருந்த விஜய்க்கு அப்படம் சுமார் வெற்றியாக அமைந்தது. அதன் பிறகு அவர் இயக்கியிருக்கும் படம்தான், தனி ஒருவன்.

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ஆனால், தனி ஒருவனின் விசேஷம், அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருப்பது.

தமிழில் சினிமாவின் ஹேண்ட்ஸம் ஹீரோவாக வலம் வந்தவர் தனி ஒருவனில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். தனி ஒருவன் மீதான எதிர்பார்ப்பை இதுதான் அதிகப்படுத்துகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online