பேய் படத்தின் மூலம் பாடகியாகும் திரிஷா

6323963362f342a89f73b5dc9715fd25திரிஷா தற்போது ‘நாயகி’ என்ற பேய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் பூஜையுடன் நடந்தது. இதில், திரிஷா கலந்துகொண்டு இப்படத்தில் நடிப்பது குறித்து பேசும்போது,

நான் தற்போது ‘அரண்மனை-2’ என்ற பேய் படத்தில் நடித்து வருகிறேன். இதில், இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறேன்.

இருந்தாலும், என்னை மையப்படுத்தி உருவாகும் ஒரு பேய் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்தது. அது இந்த படம் மூலம் நிறைவேறி விட்டது.

இது பேய் படமா? அல்லது பழி வாங்கும் கதையா? என்று இப்போது சொல்ல முடியாது. படப்பிடிப்பு நடக்கும்போது இதுகுறித்து கூறுகிறேன். இப்படத்தின் கதை மிகவும் வித்தியாசமானனது. 1980-களில் நடக்கும் கதையாக இது உருவாகவிருக்கிறது.

இப்படத்தில் நடித்திருக்கிற எல்லோருக்கும் அழகான கதாபாத்திரம். இப்படத்தில் எனக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்ல முடியாது. எல்லோருக்கும் சரிசமமாக வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கோவி. இந்த படத்தை நான் ரொம்பவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார்.

இதுமட்டுமில்லாமல், இப்படத்தில் திரிஷா, இந்த படத்தில் ஒரு பாடல்கூட பாடவிருக்கிறாராம். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இந்த படத்தின் இசையமைப்பாளர் என்னை ஒரு பாடல் பாட வைக்கப்போவதாக கூறியிருக்கிறார்.

ஒரு பேட்டியில் என்னை இரண்டு நொடிகள் பாடச் சொன்னாலே எனக்கு ஒரு மாதிரியாக இருக்கும். அப்படிப்பட்ட என்னை, இப்படத்தில் முழு பாடலை பாடவைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

பின்னர், நயன்தாரா தற்போது ‘மாயா’ என்ற பேய் படத்தில் நடிக்கிறார். அவருக்கு போட்டியாக நீங்களும் இந்த பேய் படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, போட்டிக்காக நான் இந்த படத்தில் நடிக்கவில்லை.

நயன்தாரா நடித்திருக்கும் ‘மாயா’ படம் வேறொரு கதையம்சத்துடன் உருவாகியுள்ளது. ‘நாயகி’ படம் வேறொரு கதையம்சம் கொண்டது. பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடுதான் இந்த படத்தில் நடித்தேன். மற்றபடி, எனக்கும் நயன்தாராவுக்கும் போட்டி கிடையாது என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries