மலையாள நடிகை ஆஷா சரத் ஆபாச வீடியோ – 2 சிறுவர்கள் கைது

1437834653-8635கேரளாவை சேர்ந்த நடிகை ஆஷா சரத் தொடர்பான வீடியோ விவகாரத்தில் 2 சிறுவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மோகன்லால் நடித்த த்ரிஷ்யம், கமலஹாசன் நடித்த பாபநாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆஷா சரத். கடந்த மாதம் நடிகை ஆஷா சரத்தின் போலி ஆபாச வீடியோ ஒன்று வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலம் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆஷா சரத் கேரள காவல் துறையினரிடம் எழுத்துப் பூர்வமான புகார் ஒன்றை அளித்தார். இதனையடுத்து இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் சமபந்தப்பட்ட 2 சிறுவர்களை கேரள காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். சைபர் க்ரைம் காவல்துறையின அந்த 2 சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பல நடிகைகளின் போலி ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்துள்ளது.

ஆனால், அந்த 2 சிறுவர்கள் குறித்த தகவல்களை அளிக்க காவல் துறையினர் மறுத்து விட்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online