ஸ்ருதியின் நெருங்கிய தோழியான பூஜாகுமார்

Viswaroopam_Audio_Launch04b12a8f0bab33289d83d3fc82f1ebc8கோலிவுட்டில் தற்போதைய இளைய தலைமுறை நடிகர், நடிகைகள் பொறாமையின்றி தங்களுக்குள் நட்பாக பழகிக் கொள்வது சினிமாவில் நல்ல விஷயம்தான்.

இந்த வரிசையில் தற்போது கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனும், நடிகை பூஜாகுமாரும் கோலிவுட்டில் நல்ல தோழிகளாக வலம் வருகிறார்கள்.

மும்பையில் குடியேறிவிட்ட ஸ்ருதிஹாசனுக்கு, இப்போது நெருங்கிய தோழி யார் என்றால் பூஜாகுமார்தானாம். மும்பையில் இருவரும், அடிக்கடி ஷாப்பிங் செல்வது, ஹோட்டல்களுக்கு செல்வது என ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்களாம்.

பூஜாகுமார், கமல் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வரூபம்’, ‘உத்தமவில்லன்’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனது அப்பாவுடன் படத்தில் நடித்தபோதே பூஜாகுமாரும், ஸ்ருதிஹாசனும் நெருங்கிய தோழிகளாகிவிட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சென்னையில்கூட இருவரும் ஒன்றாக பப்பில் நுழைந்து ஜாலியாக பொழுதை கழித்ததாகவும் கூறப்பட்டது. பூஜாகுமார் நடிப்பில் தற்போது ‘விஸ்வரூபம் 2’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries