கௌதம் வாசுதேவ மேனனின் கொரியர் பாய் கல்யாண்

1440153834-6481கௌதம் வாசுதேவ மேனன் தனது பசையுள்ள காலத்தில் தயாரிக்க ஆரம்பித்த படம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும். ஜெய் நாயகனாக நடித்த இந்தப் படம் தெலுங்கில், கொரியர் பாய் கல்யாண் என்ற பெயரில் தயாரானது. இதில் நாயகன் நிதின்.

கௌதமின் நிதிநிலை அறிக்கை துண்டு, வேட்டி என்று மைனஸில் போனதால் அஞ்சல்துறையின் வேலைகள் முடங்கின. தற்போது ஓரளவு நிதிநிலை சரியான நிலையில், படத்தை விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படத்தை பிரேம் சாய் இயக்கியுள்ளார். கௌதமையே அசத்திய கதை என்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online