விஜய் சேதுபதியுடன் மீண்டும் கைகோர்க்கும் ரம்யா நம்பீசன்

Vijay Sethupathi, Ramya Nambeesan in Pizza Movie Hot Photos

Vijay Sethupathi, Ramya Nambeesan in Pizza Movie Hot Photos

வெற்றிப் படமான ‘பீட்சா’-வில் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்திருந்த ரம்யா நம்பீசன் மீண்டும் அவரோடு இணைய இருக்கிறார்.

‘பீட்சா’ படத்தில் மெல்லிய இழையோடும் காதலால் உருக வைத்த இந்த ஜோடி மீண்டும் இணைய இருக்கிறது. ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அதன் இயக்குனர் அருண் குமார் இயக்கும் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். வான்சன் மூவிஸ் ஷான் சுதர்சன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘சேதுபதி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மதுரையில் நடக்கும் இந்தக் கதையில், விஜய் சேதுபதி போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். நேர்மையான போலீசாக நிலைத்திருக்க அவர்களின் அன்றாட பிரச்சனைகளையும், அவர்கள் சந்திக்கும் சவால்களையும் உணர்த்தும் படமாக இது வெளிவர இருக்கிறது.

ரம்யா நம்பீசன் இந்தப் படத்தின் அவரது கதாபாத்திரத்துக்காக எடையைக் குறைத்துள்ளார். இதில், அவரது கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு இணையாக வலுவானதாக இருக்கும் என இயக்குனர் உறுதியளித்துள்ளார். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘தெகிடி’ படத்தில் இன்னிசையால் கிறங்கடித்த நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries